தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோலமாவு கோகிலா’. இதில் ஹீரோயினாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘LKG, கூர்கா, A1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், தி வாரியர், ஏஜென்ட் கண்ணாயிரம், கட்டா குஸ்தி, நாய் சேகர் ரிட்டன்ஸ், பத்து தல, டிடி ரிட்டன்ஸ், ஜெயிலர், மார்க் ஆண்டனி’ என படங்கள் குவிந்தது.
இப்போது ரெடின் கிங்ஸ்லி ‘கங்குவா, வாஸ்கோடகாமா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.