2014 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “கதை திரைக்கதை வசனம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப்.
இதை தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களில் நடித்துவந்த சந்தோஷ் பிரதாப் கடைசியாக “ஓ மை கடவுளே” படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் நடித்து அடுத்து வெளிவரவுள்ள “என் பெயர் ஆனந்தன்” என்ற வித்தியாசமான தமிழ் திரைப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சென்சார் போர்டு இந்த படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்துள்ளதாகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் சென்சார் போர்டு சர்டிபிகேட் பற்றி மகிழ்ச்சியாக செய்தி வெளியிட்ட சந்தோஷ் பிரதாப் இதுவே இந்த படத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்று கூறியுள்ளார்.
இந்த படம் மட்டுமின்றி சந்தோஷ் பிரதாப் காம்ரேட் , மீண்டும் வா அருகில் வா, கதவை திற காற்று வரட்டும், சர்பேட்ட ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.