தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். அறிமுகமான முதல் படத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் சாதித்து காட்டியவர் சசிகுமார். அந்த படம் தான் ‘சுப்ரமணியபுரம்’. அதன் பிறகு ‘ஈசன்’ படத்தை இயக்கினாலும், ‘நாடோடிகள்’ என்ற படம் ஹீரோ சசிகுமாருக்கு அதிக லைக்ஸை பெற்று தந்தது.
‘நாடோடிகள்’ ஹிட்டிற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2’ என படங்கள் குவிந்தது. இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
தற்போது, சசிகுமார் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை – திரைக்கதை எழுதியுள்ளார். மேலும், ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’-வுடன் இணைந்து வெற்றிமாறனே தனது ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இதன் ஷூட்டிங்கை 2021 பொங்கலுக்கு பிறகு ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். விரைவில் படத்தின் இயக்குநர் யார்? என அறிவிக்கப்படுமாம்.
https://twitter.com/SasikumarDir/status/1323957115711451136