தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். அறிமுகமான முதல் படத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் சாதித்து காட்டியவர் சசிகுமார். அந்த படம் தான் ‘சுப்ரமணியபுரம்’. அதன் பிறகு ‘ஈசன்’ படத்தை இயக்கினாலும், ‘நாடோடிகள்’ என்ற படம் ஹீரோ சசிகுமாருக்கு அதிக லைக்ஸை பெற்று தந்தது.
‘நாடோடிகள்’ ஹிட்டிற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2’ என படங்கள் குவிந்தது.
இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ராஜவம்சம்’ என்ற படத்தை கதிர்வேலு இயக்க, ‘செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் கதையின் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளாராம். தற்போது, இப்படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
https://twitter.com/Kvkathirvelu/status/1321784634603024389
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.