பிரபல நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

  • August 12, 2023 / 11:17 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

சமீபத்தில், இவர் நடித்த ‘தீர்க்கதரிசி’ என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் PG.மோகன் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜுடன் இணைந்து ‘கோ’ புகழ் அஜ்மல் நடித்திருந்தார்.

இப்போது சத்யராஜ் நடிப்பில் ‘வெப்பன், ஜாக்சன்துரை 2, ஜீப்ரா’ என மூன்று தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக நேற்று (ஆகஸ்ட் 11-ஆம் தேதி) இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus