கொஞ்சம் கொரோனா நிறைய காதல்… சாந்தனு – கிகி ஜோடியின் குறும்படம் டீசர்!

  • May 18, 2020 / 08:51 AM IST

நடிகர் சாந்தனு இயக்கியுள்ள கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தின் டீசர் வெளியிடபட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் அவருக்கு மாணவராக நடித்துள்ளார்.

Konjam Corona Naraiyya Kadhal Teaser | Ko-Co-Na-Ka | Shanthnu | Kiki | With Love Shanthnu Kiki

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சந்தனு மற்றும் கிகி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். சமீபத்தில் சாந்தனு புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் மனைவியுடன் செய்யும் சேட்டைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுனில் சாந்தனு இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். கொஞ்சம் Corona Naraiyya காதல் என்ற குறும்படத்தை இயக்கியுள்ள சாந்தனு அதில் மனைவி கிகி யை நடிக்க வைத்து வீட்டில் இருந்தபடியே படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கணேஷ் இசையமைத்துள்ள இந்த குறும்படத்திற்கு கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus