நெப்போடிசம் குறித்த நட்டியின் பதிவுக்கு சாந்தனுவின் பதில்!

  • July 30, 2020 / 11:56 AM IST

சமீபகாலமாகவே திரையுலகில் இருக்கும் நெப்போடிசம் குறித்து அனைவரும் தங்கள் பதிவுகளையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பற்றியும் நெப்போடிசம் பற்றியும் பேசாத சினிமா பிரபலங்களே கிடையாது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இருக்கிறதா என்பது குறித்து பலரும் விவாதித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இருக்கிறதா..இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருக்கிறது என்று பரபரப்பான தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதற்கு தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இவர் கூறியுள்ளதாவது “வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை மட்டுமே ஆதரிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்கமாட்டார்கள்” என்று சர்ச்சையாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் பெரும்பாலான பிரபலங்கள் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் எப்போதும் கிடையாது என்றும், அதனால்தான் சினிமா பின்னணி இல்லாமல் சிவகார்த்திகேயன் போன்ற வளரும் நடிகர்கள் கூட முன்னணியில் இப்போது இருக்கிறார்கள் என்றும் அதற்கு எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு திறமை இருந்தால் போதும் எந்த ஒரு பக்க பலமும் தேவை இல்லை என்று பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இருப்பினும் இதற்கு முரணாக பலர் தங்கள் கருத்துக்களை தற்போது வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus