அடேங்கப்பா… நடிகர் சிபிராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • January 24, 2022 / 11:06 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிபிராஜ். நடிகர் சத்யராஜின் மகனான இவர் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகிறார். சிபிராஜுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’.

அதன் பிறகு நடிகர் சிபிராஜுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, வால்டர், கபடதாரி’ என படங்கள் குவிந்தது.

2008-ஆம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிபிராஜ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்போது, நடிகர் சிபிராஜ் நடிப்பில் ‘வட்டம், ரங்கா, மாயோன், ரேஞ்சர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிபிராஜின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus