அடேங்கப்பா… நடிகர் சித்தார்த்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • December 15, 2021 / 11:00 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தான். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார், இதனை ‘ஸ்ரீ சூர்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சித்தார்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சித்தார்த் நடிப்பில் ‘டக்கர், இந்தியன் 2’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus