திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சிலம்பரசன்… வருத்தத்தில் ரசிகர்கள்!

  • December 11, 2021 / 04:44 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்’ என படங்கள் குவிந்தது.

மேலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் ‘கலக்குவேன், என் ஆசை மைதிலியே, லூசுப் பெண்ணே, குட்டிப் பிசாசே, நலம்தானா, எவன்டி உன்ன பெத்தான், லவ் பண்ணலாமா வேணாமா’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் சிலம்பரசன். சமீபத்தில், சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சிலம்பரசன் வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது ‘கொரோனா’ வைரஸ் தொற்று இல்லை என்று சிலம்பரசன் தரப்பினர் கூறியுள்ளனர்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus