பிரபல நடிகரான சிலம்பரசன் சுஷாந்த் சிங், டாக்டர் சேதுராமன், சிரஞ்சீவி சார்ஜா ஆகியோரின் இறப்பால் தனக்கு ஏற்பட்ட சோகம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக வலம்வரத் தொடங்கினார்.தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.மிகுந்த திறமை மற்றும் இளகிய மனம் கொண்டவர் என்று தன் ரசிகர்களால் போற்றப்படும் சிம்பு அவ்வப்போது ஏதாவது ஒரு செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறார்.
அவர் தனது சமீபத்திய அறிக்கையில் “கடந்த இரண்டு நாட்கள் நான் மிகவும் வருந்திய நாட்களாகும். டாக்டர் சேதுராமன்,சிரஞ்சீவி சார்ஜா மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோரின் மரணம் என்னை பெரிய அளவில் பாதித்துள்ளது. இவர்கள் மூவருமே எனது மிக நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்களின் இறப்பு இந்த சினிமா துறைக்கு எற்பட்ய இழப்பு மட்டுமல்லாது ,என் நண்பர்களை இழந்ததும் ஆகும். அவர்களது ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர்” இறந்த மூவரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இது எந்த வகையிலும் அவர்களுக்கு உதவாது என்று தெரிந்தாலும் என்னால் செய்ய முடிந்தது இதுவே” என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தம் மற்றும் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களின் கதறல் என்ற நிலை தற்போது நிலவி வருகிறது, அவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும், தன்னம்பிக்கை விடாமல் இந்த சூழ்நிலையை நாம் எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் அவர் “எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது” என்றும், எப்போதும் உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு”படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் .இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.