படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நடிகர் சிலம்பரசன்!

  • October 6, 2020 / 10:41 PM IST

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன்.

நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்பு திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus