தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோவாக உருவெடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. தன் தந்தை எஸ்.டி.ஆர் போலவே பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகர் சிலம்பரசன், தன் ரசிகர் ஒருவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் சர்ப்ரைஸாக கூறி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
2002ஆம் ஆண்டு தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “காதல் அழிவதில்லை” படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் வலம் வர ஆரம்பித்த நடிகர் சிம்பு, தொடர்ந்து மன்மதன், வல்லவன், கோவில் தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், போடா போடி, வாலு இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா மற்றும் சமீபத்தில் வந்தாராஜாவாதான்வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.
இந்த லாக்டோன் ஆரம்பித்த பிறகு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சிக்குவல் குறும்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்திலும், யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் “மகா” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சிம்பு தனது ரசிகர் ஒருவரின் பிறந்த நாளன்று அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததை உற்சாகமாக அவரது ரசிகர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார். இந்தப் பதிவு சிம்பு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
https://twitter.com/DEEPU_S_GIRI/status/1288887004562743297?s=19