டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ’ என படங்கள் குவிந்தது.
இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் கிளீன் ஷேவ் பண்ணியிருக்கும் இந்த ஸ்டில்லை பார்த்த ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் “என்ன அடுத்தது ஹிந்தி படமா?” என்று கமென்ட் போட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் “சரி அதையும் பண்ணி கொடுத்திடலாமேன்னு தான்… நீங்களும் வாங்க.. நாம சேர்ந்தே போகலாம்” என்று பதில் கூறியுள்ளார்.
View this post on InstagramOne more pic from @navneth85 photography #Throwback
A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan) on