விடுதலை படம் பற்றி முதன் முறையாக பேசிய சூரி !

அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை முதலில் குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்து இருந்தார் . ஆனால் பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை . இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . வெற்றிமாறன் மற்றும் இளையராஜா இணையும் முதல் படமாக இந்த படம் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு எழுந்துள்ளது .

இந்நிலையில் விடுதலை படம் தொடங்கும் பொழுது 45 நாட்களில் முடித்து விடலாம் என்று வெற்றிமாறன் சொல்லியிருந்தார் . ஆனால் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை . தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை படத்தின் நாயகன் படம் பற்றி பேசி உள்ளார் . அதில் விடுதலை மிக முக்கியமான படமாக இருக்கும் . மக்களுக்கான படமாக இருக்கும் . இந்த படத்துக்காக இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டுள்ளார் . நானும் இதில் உள்ளேன் என நினைக்கும்போது பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் .

Share.