ரூ.4000 எடுத்து வச்சுட்டு கேக்கை வெட்டு… சூரியின் பிறந்த நாள் அலப்பறை!
August 28, 2020 / 07:39 PM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே சூரியின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் சூரி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் சூரியின் ஸ்பெஷல். சூரி திரையுலகில் என்ட்ரியான போது சில படங்களில் தனக்கு கிடைத்த சின்ன ரோலில் தான் நடித்து வந்தார்.
இப்படி சென்று கொண்டிருந்த சூரியின் கிராஃப் டக்கென உயரத்திற்கு சென்றது ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தால் தான். ‘பரோட்டா’வை பார்த்தாலே ‘வெண்ணிலா கபடிகுழு’வில் வரும் பரோட்டா சீன் தான் மைண்டுக்கு வரும். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து சூரியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சூரி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் சூரிக்கு ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கப் போகிறது. ஏனெனில், இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக வலம் வரப்போகிறார். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 27-ஆம் தேதி) நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் மகள் மற்றும் மகன் இணைந்து வாங்கிய கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பாக சூரி ட்விட்டரில் “400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க.. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. தேங்க்யூ கட்டிபெத்தார்களா” என்று கூறியுள்ளார். மேலும், அந்த கேக்கின் ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். வழக்கமாக கேக்கில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்த கேக்கில் “கேக் செலவு – 1500, பெட்ரோல் செலவு – 500, டெகரேஷன் செலவு – 2000… மொத்த காசு 4000 எடுத்து வச்சுட்டு கேக்கை வெட்டு” என்று எழுதப்பட்டிருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.