வெளியானது சூரியின் முதல் பார்வை !

  • November 10, 2022 / 08:30 PM IST

நடிகர் சூரி, தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார் .
விஜய் சேதுபதி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கான படப்பிடிப்பு காட்சியினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

விடுதலை படத்தை நடித்து முடித்த சூரி தற்போது தனது தந்தை முத்துசாமியின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த கதையை இயக்க சூரி இயக்குனரை தேடி வருகிறார் .

இதனை அடுத்து கற்றது தமிழ் ,பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் தற்போது நிவின் பாலியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்று தலைப்பு வைத்துள்ளனர். அந்த படத்தில் சூரியும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் . தற்போது சூரி கதாபாத்திரத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus