தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி பிறகு தன் கடின உழைப்பால் சிறந்த நகைச்சுவை நடிகராக தற்போது தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் சூரி.
1998ஆம் வருடம் வெளிவந்த “மறுமலர்ச்சி” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த நடிகர் சூரி, அதைத் தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் 2009ஆம் வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் சூரி.
இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பரோட்டா குறித்து ஒரு காமெடி அமைந்திருக்கும். அதிலிருந்துதான் அவர் “பரோட்டா சூரி” என்றழைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு வெளிவந்த “போராளி”, எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த “சுந்தரபாண்டியன்”, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினிமுருகன்” பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்த “ஜில்லா” ஆகிய படங்களில் தன் நகைச்சுவை திறமை மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
தற்போது தேசியவிருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் சூரி.இந்த படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ் இன்ஃவோடைன்மேன்ட் தயாரிக்கிறது.
அதுமட்டுமின்றி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “அண்ணாத” படத்திலும் சூரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூரி தற்போது ஜிம் சென்று வொர்க் அவுட் செய்வது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லாக்டவுனில் வீட்டிலேயே வொர்க் அவுட் செய்து வந்த இவர் தற்போது ஜிம் சென்றுள்ளதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.