கொரோனா ஒருபக்கம் கோரத்தாண்டவம் ஆடி அதிர்வலையை நாடுமுழுவதும் ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்(EIA)குறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இந்த விதிகளுக்கு பலரும் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பதும், அதற்கு பல பிரபலங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், ஏன் சாதாரண மக்களும் கூட தங்களது எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக சில முக்கியமான திட்டங்களை மக்களின் கருத்துக்கள் இல்லாமலே நிறைவேற்றலாம் என்ற விதிக்கு கடும் எதிர்ப்பை ஆர்வலர்களும் மக்களும் அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகிறார்கள்.
இதைக் குறித்து நேற்று நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இவரது கருத்தை பலரும் வரவேற்று பாராட்டியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து இன்று அவரது சகோதரர் நடிகர் சூர்யா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது “பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனங்கள் மிகவும் ஆபத்தானது.. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க..நம் மௌனம் கலைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020 https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020
தற்போது தனது சகோதரரை தொடர்ந்து சூர்யாவின் இந்த பதிவிற்கு மக்களிடம் பாராட்டுகள் குவிகிறது. இவர்கள் மட்டுமின்றி சில சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் இதற்கான எதிர்ப்புகளை கடுமையாக தெரிவித்து வருகிறார்கள்.