நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது . மோகன் பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது . இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது .
இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் . இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று மும்பையில் நடந்து உள்ளது . சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார் . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்து வருகிறார் .
இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து இருந்தார் .இந்நிலையில் 68 வது தேசிய விருது சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது . அதில் சுதா கொங்கரா, சூர்யா , ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி ஆகியோருக்கு தேசிய விருது அறிவித்து இருந்தனர் .
இந்நிலையில் இன்று 68-வது தேசிய விருது வழங்கும் விழா நடக்க இருக்கிறது அதில் கலந்துகொள்ள நடிகர் சூர்யா ,அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவரது குழைந்தைகள் ஆகியவர்களுடன் சென்று உள்ளார். தற்போது அவர்கள் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது .
மும்பையில் ‘மாறா’
டெல்லியில் நடைபெற உள்ள தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்றபோது மும்பை விமான நிலையத்தில், குடும்பத்துடன் சூர்யா!#Sunnews | #Suriya | #NationalAwards | @Suriya_offl pic.twitter.com/9IpQbQUOeh
— Sun News (@sunnewstamil) September 30, 2022