வைரலாகும் சூர்யாவின் புகைப்படம் !

  • May 19, 2022 / 12:26 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா .ரஞ்சித்,நடிகர் சிலம்பரசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை நடிகர் கமலுடன் இணைந்து வெளியிடுகிறார்.

நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்தனர் .

நடிகர் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்கிற படத்தை முதலில் இயக்க இருந்தார் லோகேஷ் .சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் இருக்கிறது . இந்நிலையில் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .

இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . மேலும் அதில் விக்ரம் உலகத்திற்கு நடிகர் சூர்யாவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார் .அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus