நடிகர் சூர்யாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த புதிய படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.

இதற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி ஆரம்பிக்க ப்ளான் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று கூறியுள்ளார்.

Share.