நடிகர் சூரியாவின் “அருவா” எப்போது?

  • June 29, 2020 / 12:21 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் “காப்பான்”. இதை அடுத்து, இவர் சுதா கொங்கர்னா இயக்கத்தில் “சூரரைப்போற்று” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெளியீடு லாக்டவுன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆறாவது படமான “அருவா” படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமான செய்தி வெளிவந்திருந்தது. இந்த படம் 2020 தீபாவளி அன்று வெளியிடப்படும் என்றும் திரைப்பட வட்டாரம் தெரிவித்தது. ஆனால் லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது இந்த திரைப்பட குழு இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கும் என்றும், அதற்கான வேலைகளில் திரைப்படக் குழு இறங்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Actor Surya 's Aruvaa movie update

இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். டி இமான் இசையமைப்பில், இந்தப் படத்தின் காட்சிகளை வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும்.

இதை தொடர்ந்து சூர்யா” 24″ பார்ட் 2-வில் நடிக்கவிருப்பதாக செய்தி சமீபத்தில் வெளியானது. அதைப்போல ஜல்லிக்கட்டு விவகாரத்தை தழுவி சூர்யா “வாடிவாசல்” என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

இவ்வாறு நடிகர் சூர்யாவின் படங்கள் அடுத்தடுத்து லாக்டவுன் முடிந்ததும் வெளிவரும் என்ற செய்திகளின் மூலம் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus