சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் என்ட்ரியான ‘தளபதி’ விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • April 2, 2023 / 10:00 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.

‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’வை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கவிருக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே, சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் விஜய் இருக்கிறார். தற்போது, நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, விஜய் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள முதல் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus