‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
சமீபத்தில், வடிவேலு மிக முக்கிய ரோலில் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்போது வடிவேலு கைவசம் ‘சந்திரமுகி 2’ படம் மட்டும் இருக்கிறது.
இந்நிலையில், வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52) உடல்நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.