‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘விஜய் 65’… படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?
August 19, 2020 / 10:43 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ தொடர்பாக ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கான முறையான ஒப்பந்தம் இன்று (ஆகஸ்ட் 18-ஆம் தேதி) போடப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2021) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்க ப்ளான் போட்டுள்ளனர். படத்தை 2021 தீபாவளிக்கு (நவம்பர் 4-ஆம் தேதி) வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.