தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது, நடிகர் ‘தளபதி’ விஜய்யும் – இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணைந்து ‘மாஸ்டர்’ படத்தின் ஃபைனல் வெர்ஷனை பார்த்ததாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. மேலும், படத்தை பார்த்து முடித்ததும் லோகேஷ் கனகராஜை விஜய் பாராட்டியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ‘மாஸ்டர்’ டீமிடம் விசாரிக்கையில் “இந்த தகவல் உண்மையல்ல. இந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் அல்லது அடுத்த மாதம் (அக்டோபர்) தொடக்கத்தில் தான் ‘மாஸ்டர்’ படத்தை பார்க்க விஜய் சார் ப்ளான் போட்டுள்ளார்” என்று கூறியுள்ளனர்.