சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக இருக்கும் விஜய், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ‘வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய்.
அதன் பிறகு விஜய் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘நாளைய தீர்ப்பு’. இந்த படத்துக்கு பிறகு நடிகர் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இதுவரை விஜய் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ…
1.மாஸ்டர் :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் விஜய் சேதுபதி, மகேந்திரன், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு , ரமேஷ் திலக், சிபி, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
2.பிகில் :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிகில்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நயன்தாரா, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், அம்ரிதா, வர்ஷா, டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி, மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
3.மெர்சல் :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மெர்சல்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, கோவை சரளா, வடிவேலு, சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
4.சர்கார் :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சர்கார்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலக்ஷ்மி சரத்குமார், லிவிங்க்ஸ்டன், யோகி பாபு, பழ.கருப்பையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
5.தெறி :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இதனை இயக்கியிருந்தார். இதில் நடிகை மீனாவின் மகள் நைநிகாவும், விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர்.
6.துப்பாக்கி :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘துப்பாக்கி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘ஜெகதீஷ்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய்.
7.கத்தி :
‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கத்தி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘கதிரேசன், ஜீவானந்தம்’ என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய்.