சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியானாரா விஜய்யின் மகள்?…. ஷாந்தனு போட்ட ட்வீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள ஷாந்தனுவிற்கு இன்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) பிறந்த நாளாம்.

ஆகையால், பல திரையுலக நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஸ்டேட்டஸ் போட்ட வண்ணமுள்ளனர். இந்நிலையில், விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் ட்விட்டரில் ஷாந்தனுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லியிருந்தார். அதற்கு ஷாந்தனுவும் “நன்றி” என்று பதில் ட்வீட் போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் மகள் ட்விட்டரில் இணைந்து விட்டார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்த போது “இது திவ்யா சாஷாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை” என்று கூறியுள்ளனர்.

Share.