தளபதியுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

  • September 10, 2020 / 04:30 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் பழைய புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து தங்கள் அன்பை பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இதுவரை வெளிவராத விஜய்யின் பழைய புகைப்படங்கள் கூட இந்த லாக்டவுனில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது விஜய்யுடன் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டது இந்த படத்தில் விஜய்யுடன் இருக்கும் அந்த குழந்தைதான். ஆம் . இந்த படத்தில் விஜய்யுடன் இருக்கும் அந்த குழந்தை தற்போது சின்னத்திரையில் ஜொலித்து வரும் ஹீரோயின் பிந்து ஹீமா.

தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆனால் இவர் இந்த புகைப்படத்தை விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட பிந்து ஹீமா தனக்கும் விஜய்க்கும் உடனான உறவு என்ன என்பதை குறிப்பிட மாட்டேன் என்பது போல கமெண்ட் செய்துள்ளார்.

தற்போது பிந்து ஹீமாமாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு விஜய்யுடன் இருக்கும் இந்த நெருக்கமான உறவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus