அடேங்கப்பா! இத்தனை கோடியா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் விக்ரம்!

  • March 10, 2023 / 02:00 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் 2, தங்கலான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பொன்னியின் செல்வன் 2’ வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதியும், ‘துருவ நட்சத்திரம்’ மே 19-ஆம் தேதியும் ரிலீஸாகவிருக்கிறது. ‘தங்கலான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம்.

இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் பார்வதி, மாளவிகா மோகனன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்காக நடிகர் விக்ரமுக்கு ரூ.22 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்நிலையில், நடிகர் விக்ரம் தான் ஒப்பந்தமாகப்போகும் புதிய படங்களுக்கு ரூ.30 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus