விஷால் மற்றும் அவரது தந்தை- கொரோனா பாதிப்பு நிலைமை என்ன?
July 25, 2020 / 09:46 PM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்வலையையும், அவர்கள் அன்றாட வாழ்வில் பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் சிலர் குணமடைந்தும் வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு லாக்டவுன் அறிவித்துள்ளது. மேலும் மக்களை மாஸ்க் அணிவது, சமூக விலைகலை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
எனினும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுதான் வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக விஷால் செய்தி வெளியிட்டிருந்தார்.
நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு முதலில் கொரோனா பாதிப்பு வந்ததாகவும், அவரை கவனித்துக் கொண்டிருந்த விஷாலுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டதாகவும் செய்தி வெளிவந்தது. பின்பு இவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வந்தார்கள்.
தற்போது நடிகர் விஷால் வெளியிட்டுள்ள செய்தி என்னவென்றால் விஷால் மற்றும் அவரது தந்தை கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், தற்போது இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி ஆயுர்வேத முறைப்படி ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் தற்போது எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் “சக்ரா” என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.