இதுதான் என் வெற்றியின் ரகசியம் நடிகர் யோகிபாபு!

  • September 30, 2020 / 12:00 PM IST

தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது மூலம் அறிமுகமாகி பின்பு புகழ்பெற்ற காமெடி நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.

2016 ஆம் வருடம் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற யோகிபாபு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” மற்றும் “பரியேறும் பெருமாள்” படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த “காக்டைல்” திரைப்படம் கடைசியாக ஜீ5 எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இவர் நடித்துள்ளா டிக்கிலோனா, ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி, ட்ரிப் ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

தற்போது தன் வெற்றியின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ள யோகிபாபு, நடிகர் கவுண்டமணி தனக்கு அட்வைஸ் செய்ததாகவும் அதை எப்பொழுதும் பின்பற்றுவதால் மட்டுமே இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கவுண்டமணியை முதல்முறையாக சந்தித்தபொழுது எதைப்பற்றியும் கவலைப்படாமல் கனவை நிறைவேற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தொழில் செய்தால் முன்னேறலாம் என்று அவருக்கு அட்வைஸ் செய்திருந்தாராம் கவுண்டமணி. தற்போது படு பிசியாக இருக்கிறார் யோகிபாபு.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus