நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!

  • October 12, 2020 / 09:23 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த இந்த நடிகை தன் இனிமையான குரலாலும் பலரை ஈர்த்துள்ளார்.

இவர் தற்போது நடிகர் சர்வானந்த் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள “மகா சமுத்திரம்” எனும் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சர்வானந்த் உடன் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வந்தது.

தற்போது இந்தக் குழுவில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் சேர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்பட குழுவில் அதிதி சேர்ந்ததை அடுத்து இந்த தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியாக அந்த செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் வருவதற்கான ஆவல் அதிகரித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus