புடவையில் பேரழகாய் மின்னும் அதிதி ஷங்கருக்கு முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

  • October 12, 2022 / 10:43 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவரது மகள் அதிதியும் சமீபத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கினார். அதிதிக்கு அமைந்த முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தியுடன் தான். அது தான் ‘விருமன்’ திரைப்படம்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்கியிருந்தார். இதனை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அதிதி ஷங்கர் ‘மாவீரன்’ என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார்.

இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus