சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அந்த படம் தான் ‘இருவர்’. இதில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தான் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா ராய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2007-ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்-க்கும் திருமணம் நடைபெற்றது, அபிஷேக் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இப்போது ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’-யில் நடித்து வருகிறார்.
இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.