வித்தியாசமான காஸ்டியூமில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • June 30, 2021 / 01:54 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையுலகில் என்ட்ரியான புதிதில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அட்டகத்தி’ என்ற படத்தில் தான் ஆடியன்ஸ் மனதில் ரெஜிஸ்டர் ஆனார். அதன் பிறகு நடித்து 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, கட்டப்பாவ காணோம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், லக்ஷ்மி, சாமி ஸ்கொயர், செக்கச்சிவந்த வானம், வடசென்னை, கனா, மெய், நம்ம வீட்டுப் பிள்ளை, வானம் கொட்டட்டும்’ என படங்கள் குவிந்தது.

Actress Aishwarya Rajesh New Photos1

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus