ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி, RRR, பிரம்மாஸ்திரா’ என படங்கள் குவிந்தது. கடந்த ஆண்டு (2022) முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, அலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து அலியா பட் குளிக்கும் இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.