விவாகரத்து தொடர்பாக பரவிய செய்தி… இன்ஸ்டாவில் விளக்கமளித்த நடிகை அசின்!

  • June 28, 2023 / 06:45 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அசின். இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’. இந்த படத்தில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.

இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை அசினுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அசின் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அசின். ராகுல் ஷர்மா – அசின் தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில், அசினுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டதாக தண்டோரா போடப்பட்டது. தற்போது, அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus