தமிழ்சினிமாவில் 2017 ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாதமான்” படத்தில் சுடர்விழி எனும் கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது குணச்சித்திர நடிகராக இருப்பவர் நடிகை இந்துஜா.
இவர் “மெர்குரி”, “பில்லா பாண்டி”, “பூமராங்”, “மகாமுனி” போன்ற திரைப்படங்களில் நடித்து பின்பு விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “காக்கி” திரைப்படத்திலும், நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்திலும், “நெற்றிக்கண்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவரும் நடிகை அதுல்யா ரவியும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இன்று இந்துஜாவின் பிறந்தநாளையொட்டி நடிகை அதுல்யா ரவி இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது அன்பு மழையை பொழிந்துள்ளார்.
இவர் குறிப்பிட்டுள்ளதாவது “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா. உன்னைப்போல் என்னை புரிந்து கொண்டவர் யாருமே இல்லை. மிகவும் நேர்மையான நியாயமான அன்பான லட்சியத்தை நோக்கி குறிக்கோள் கொண்ட ஒரு நபர் நீ. கண்டிப்பாக நீ நினைத்த உயரங்களை எட்டுவாய். உன் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் நான் கூடவே இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். லவ் யூ டூ மூன் அண்ட் பேக்” என்று அன்பு மழையை தன் வாசகம் மூலம் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.