சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் கேத்ரின் திரசா. தமிழில் அறிமுகமான முதல் படமே கேத்ரின் திரசாவுக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘மெட்ராஸ்’. இதில் ஹீரோவாக கார்த்தி நடிக்க, படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் ‘கலையரசி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து அசத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் கேத்ரின் திரசா. ‘மெட்ராஸ்’ படத்துக்கு பிறகு நடிகை கேத்ரின் திரசாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம்’ என தமிழில் படங்கள் குவிந்தது.
கேத்ரின் திரசா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
View this post on Instagram
The grass is greener where you water it. ~ Neil Barringham. How is everybody this morning? ☺️
A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on