Eesha Rebba : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ஈஷா ரெப்பா… வைரலாகும் வீடியோ!

  • March 11, 2024 / 04:51 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஈஷா ரெப்பா. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ தான். இதில் ஈஷா ரெப்பாவுக்கு கெஸ்ட் ரோல் தான்.

அதன் பிறகு ‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ஈஷா ரெப்பா. ‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ படத்துக்கு பிறகு நடிகை ஈஷா ரெப்பாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பன்டிபோட்டு, அமி துமி, தர்ஷகுடு, ஆவ், பிராண்ட் பாபு, அரவிந்த சமீதா வீர ராகவா, சுப்ரமண்யபுரம், சவ்யசாச்சி, பிட்ட கதலு, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ என தெலுங்கில் படங்கள் குவிந்தது. ஈஷா ரெப்பா தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘ஓய்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது ஈஷா ரெப்பா கைவசம் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus