2010 ஆம் ஆண்டு வெளிவந்த “நல்லவன்’ எனும் மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்.
தொடர்ந்து சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், 2015 ஆம் வருடம் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான “பாபநாசம்” படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருப்பார்.
பாபநாசம் திரைப்படம் 2013ஆம் வருடம் மலையாளத்தில் வெளிவந்த “த்ரிஷ்யம்” படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் மோகன்லால், கமல் இடத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திலும் அவரது இரண்டாவது மகளாக எஸ்தர் அனில்தான் நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் இவரது சிறந்த நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.
தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் இவர், மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த எஸ்தர் அனில்,சமீபத்தில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
குழந்தையாக இருந்த இவர் புகைப்படங்களில் தற்போது வளர்ந்து பதுமையாய் மாறி உள்ளார். அவரது புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்து ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.instagram.com/p/CFTg2t-JL0Z/?igshid=1pb44tehdbe4k
https://www.instagram.com/p/CFTg2t-JL0Z/?igshid=1rxdw2smf5tia
https://www.instagram.com/p/CFTg2t-JL0Z/?igshid=4kyi3iuooa38
https://www.instagram.com/p/CFE97pkJ6rh/?igshid=blen7xterpg3
https://www.instagram.com/p/CFQ2V_ApFN4/?igshid=9ftdqn0xbb7d