நடிகை ஹன்ஷிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ் & வீடியோஸ்!

திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.

பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, மஹா’ என படங்கள் குவிந்தது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 9-ஆம் தேதி) நடிகை ஹன்ஷிகாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகியுள்ளது.

Share.