குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. இவர் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது யூடியூப் சேனலில் பிரபல பாடலான தனுஷின் ரகிட ரகிட ரகிட பாடலுக்கு தன் கணவருடன் குத்தாட்டம் ஆடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “ரகிட ரகிட ரகிட” லிரிக் வீடியோவாக தற்போது வெளியாகி, தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. விவேக் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார்.சந்தோஷ் நாராயணன், தனுஷ், தீ ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், கலையரசன் நடித்துள்ளார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்கிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.