‘கே.ஜி.எஃப்’ பட நடிகரை திருமணம் செய்து கொள்ளப்போகும் நடிகை ஹரிப்பிரியா… வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ!

  • December 9, 2022 / 09:18 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிப்பிரியா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘கனகவேல் காக்க’. இயக்குநர் கவின்பாலா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கரன் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘முரண், வல்லக்கோட்டை’ ஆகிய படங்களில் நடித்தார். ஹரிப்பிரியா நடித்து சமீபத்தில் வெளியான தமிழ் படம் ‘நான் மிருகமாய் மாற’. இதில் சசிக்குமார் ஹீரோவாக நடிக்க, இதனை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருந்தார்.

ஹரிப்பிரியா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, ஹரிப்பிரியா பிரபல கன்னட நடிகர் வசிஷ்டா என்.சிம்ஹாவை காதலித்து வருவதாகவும், மிக விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

இந்த தகவலை ஹரிப்பிரியாவே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். நடிகர் வசிஷ்டா என்.சிம்ஹா யாஷின் ‘கே.ஜி.எஃப் 1 & 2’வில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus