அழகு பதுமையாய் போஸ் கொடுத்துள்ள நடிகை இந்துஜா!

  • September 3, 2020 / 11:00 AM IST

தமிழ்சினிமாவில் 2017 ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாதமான்” படத்தில் சுடர்விழி எனும் கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது குணச்சித்திர நடிகராக இருப்பவர் நடிகை இந்துஜா.

இவர் “மெர்குரி”, “பில்லா பாண்டி”, “பூமராங்”, “மகாமுனி” போன்ற திரைப்படங்களில் நடித்து பின்பு விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “காக்கி” திரைப்படத்திலும், நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்திலும், “நெற்றிக்கண்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் வரிகளில் அமிதாஷ் பிரதன் பாடி நடித்து வெளியான “கொரோனா கண்ணால” பாடலில் இவர் நடித்திருந்தார். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களில் அழகு பதுமையை காட்சியளிக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus