தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இந்துஜா ரவிச்சந்திரனுக்கு இன்று (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) பிறந்த நாளாம். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெறுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், அதை செய்து காட்டியவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
2017-ஆம் ஆண்டு ரிலீஸான ‘மேயாத மான்’ என்ற படம் தான் இந்துஜாவிற்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம். இதில் ஹீரோ வைபவ்வின் தங்கை கதாபாத்திரத்தில் ‘சுடர்விழி’-யாக வலம் வந்திருந்தார் இந்துஜா. இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை இந்துஜாவிற்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில்’ என படங்கள் குவிந்தது.
இதில் ‘பிகில்’, இந்துஜாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு படமாக அமைந்தது. காரணம் இந்த படத்தில் கதையின் நாயகனாக முன்னணி நடிகர் ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். படத்தில் இந்துஜா கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண்’ மற்றும் விஜய் ஆண்டனியின் ‘காக்கி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை இந்துஜா ரவிச்சந்திரனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56