நடிகை இனியாவின் அசத்தல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
September 10, 2020 / 07:40 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான “பாடகசாலை” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இனியா.
ஏற்கனவே மலையாள திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்த இனியா தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பாடகசாலை திரைப்படத்தை தொடர்ந்து யுத்தம் செய், வாகைசூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், மாசாணி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக வடிவுடையான் இயக்கத்தில் வெளியான பொட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது “காபி” என்ற தமிழ் படத்திலும் அதுமட்டுமின்றி ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது வரும் இனியா தற்போது லாக்டவுனில் மற்ற ஹீரோயின்களை போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.