லவ் டுடே ஹீரோயின் இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

  • November 5, 2022 / 12:42 AM IST

பாலாவின் நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை இவானா. தற்போது இவர் கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப்பின் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் .

இந்தபடத்தில் அவரது பாத்திரத்தை பற்றி பேசி உள்ளார் . “நான் நடிக்கும் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தும் மற்றும் பார்வையாளர்களுக்கு எதையாவது தெரிவிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன்.

அதில் நிகிதா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் . இந்த பாத்திரம் பக்கத்து வீட்டுப் பெண், அழகான மற்றும் கலகலப்பானவர் என்று இவானா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் . “ இயக்குனர் பிரதீப் இந்த படத்தை இயக்கி உள்ளார் . யுவன் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இன்று வெளியாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இது ஒரு பக்கம் இருக்க நடிகை இவனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus